Diploma in Pastoral Leadership
கல்விதகுதி: ஏதாவதொரு பள்ளி படிப்பு/ அட்மிஷன் ரூ.500/ மாதம் ரூ.200/ காலம்: ஒரு வருட படிப்பு
ஆன்லைன் இறையியல் படிப்பு
தேவன் உங்களை எங்கு வைத்திருக்கிறாரோ, அங்கிருந்தபடியே குடும்ப மற்றும் வேலைப் பொறுப்புகளுக்கு இடையே, உங்கள் நேர வசதிக்கேற்ப தேவ வார்த்தையை ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள்.
போதகர்கள், சபை ஊழியர்கள், தலைவர்கள் மற்றும் விசுவாசிகள் என அனைவரையும் ஆவிக்குரிய மேன்மைக்காகவும், சிறந்த ஊழியத்திற்காகவும் நாங்கள் சிறப்பாக உங்களை தயார்படுத்துகிறோம்.
அனைத்தும் ஆடியோ பாடங்கள் — வகுப்பறை உங்கள் இடத்தில்.
சமீபத்திய நிகழ்வுகள்
பட்டமளிப்பு, ஊழிய அபிஷேகம் மற்றும் பேரவை விழாக்கள் மூலம் நம் கர்த்தருடைய நன்மையைக் கொண்டாடுகிறோம் — நம் மாணவர்கள் நெடும்பயணம் செய்து அடைந்த பரிசுத்த மைல்கற்கள் இவை.
அடிப்படை வேத பாடம் முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை... வேதத்தின் ஆழத்தை அறியவும், ஊழியத்தில் சிறக்கவும், ஆவிக்குரிய வாழ்வில் வளரவும் இதுவே சிறந்த தருணம்! முதல் பாடம் முற்றிலும் இலவசம் — போதனையைக் கேளுங்கள், பிறகு சேருங்கள்.
கல்விதகுதி: ஏதாவதொரு பள்ளி படிப்பு/ அட்மிஷன் ரூ.500/ மாதம் ரூ.200/ காலம்: ஒரு வருட படிப்பு
கல்விதகுதி: ஏதாவதொரு பள்ளிபடிப்பு / காலம்: மூன்று மாத படிப்பு
இது எல்லா சபையினருக்குமான ஆரோக்கியமான உபதேசத்தை உடையது! ஆவிக்குரிய வாழ்வில் வளர, ஊழியம் செய்ய விரும்பும் & செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும்... உங்கள் வீடு தேடி வரும் எளிய ஆன்லைன் வேதாகமப் பயிற்சி!
நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்வதற்காகத் தமிழ்/ஆங்கில வழி பாடங்கள். உங்கள் மொழியிலேயே இறையியலை எளிமையாக, நன்றாகக் கற்கலாம்.
பாட விரிவுரைகள் ஆடியோவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன; Zoom வகுப்பில்லை. தொலைபேசி வழி, பயணங்களில், உங்களுக்கு வசதியான நேரத்தில் கேட்கலாம் — வேகமான இணைய இணைப்பு தேவையில்லை.
ஊழிய அனுபவத்தோடு கூடிய அவர்களின் இறையியல் அணுகுமுறைப் போதனையினால், நீங்கள் வேத அறிவிலும், ஆவிக்குரிய வளர்ச்சியிலும், ஊழிய வளர்ச்சியிலும் சிறந்த தலைவர்களாக உருவாக்கப்படுகிறீர்கள்.
ஏழை ஊழியர்களுக்குக் கட்டணச் சலுகையும் உண்டு. ஆன்லைனில் எளிதாகக் கட்டணம் செலுத்தும் முறை. எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே படித்து, வசதியான நேரத்தில் தேர்வு எழுதலாம்.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உள்ள ஒவ்வொரு யூனிட்டையும் கேட்டுவிட்டு, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் பத்து கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதும். ஒவ்வொரு யூனிட்டுக்கும் மதிப்பெண்கள் பதியப்பட்டு, இறுதியில் பாடப்பிரிவின் எல்லா யூனிட்டுகளுக்கும் சேர்த்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நிலையான தேர்வுக் கால அட்டவணையை நாங்கள் நிர்ணயிக்கவில்லை. ஒரு மாதத்தில் உங்கள் பாடத்தின் யூனிட்டுகளுக்கான எளிய தேர்வை எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். நீங்கள் நிறுத்திய இடத்திலிருந்து தொடர, நாங்கள் அதை நினைவில் வைத்திருப்போம்.
நீங்கள் எளிதாகப் படித்து முடிப்பதற்காக PDF புத்தகங்கள்; அந்தப் புத்தகங்களை விளக்கும் ஆடியோ பாடங்கள். இது தவிர, ஆன்லைன் லைப்ரரி புத்தகங்களை வாசிக்கும் வசதியும் உண்டு.
ஒவ்வொரு பட்டப் படிப்பையும் படித்து முடித்து, ஆன்லைனில் சரிபார்க்கக்கூடிய அங்கீகாரமான சான்றிதழை மதிப்பெண் பட்டியலோடு பெறுங்கள்.
முதல் வருகையிலிருந்து முதல் பாடம் வரை நான்கு படிகள்.
ஒவ்வொரு பாடநெறியும் ஒரு மாதிரிப் பாடத்துடன் தொடங்குகிறது. சேர்வதற்கு முன் போதனையைக் கேளுங்கள்.
உங்கள் இமெயில் ஐடியைக் கொண்டு பதிவு செய்து, இமெயிலில் அனுப்பப்படும் லிங்கைக் கிளிக் செய்து உறுதிப்படுத்துங்கள்.
UPI, ATM அட்டை அல்லது நெட்பேங்கிங் மூலம் செலுத்துங்கள். கட்டணம் பெறப்பட்டது உறுதியானதும் அணுகல் திறக்கும்.
உங்கள் வசதியான நேரத்தில் பாடங்களைப் படித்து, ஒவ்வொரு பாடத்திற்குமான ஒரு வார்த்தைத் தேர்வை எழுதினால் போதும். நீங்கள் நிறுத்திய இடத்திலிருந்து தொடருங்கள்.
மிஷனெரி ஊழியம் செய்கிற எனக்கு நேரடியாகச் சென்று வேதாகமக் கல்லூரியில் பயில முடியவில்லை. விருப்பம் இருந்தாலும் பல ஆண்டுகளாகத் தள்ளிப்போட்டிருந்த இப்படிப்பை, இது ஆன்லைன் வேதாகமக் கல்லூரியாக இருப்பதினால், இப்பொழுது சிறப்பாகப் படித்து முடித்து ஊழியம் செய்கிறேன்.
சேர்க்கை நடைபெறுகிறது. இன்றே ஒரு இலவசப் பாடத்துடன் தொடங்குங்கள்.