படிப்பின் பெயர், தலைப்பு அல்லது ஒரு சொல்லைத் தட்டச்சு செய்யுங்கள்.

    செமினரி

    கள ஊழியங்கள்

    கர்த்தர் எங்களிடம் ஒப்படைத்த ஊழியங்கள், களத்தில் இன்று நடந்து கொண்டிருப்பவை.

    5 ஜெபக்குழு ஐக்கியங்கள்
    8 நேரடி மையங்கள்
    10 அனைவருக்கும் இலவசப் பயிற்சிகள்
    30 VBS கிராமங்கள் / ஆண்டு
    ஜெபக் கூட்டத்தில் ஒலிவாங்கியுடன் ஜெபிக்கும் சகோதரி; பின்னால் கைகூப்பி ஜெபிக்கும் ஒருவர்

    ஜெபக்குழு ஐக்கியங்கள்

    ஐந்து இடங்களில் அநேகர் இணைந்து ஜெபிக்கிறோம்.

    விடுதலை ஊழியம் (Deliverance): இருளில் வாழும் மக்களுக்குக் கிறிஸ்துவின் ஜீவ ஒளியைக் கொண்டு செல்கிறோம். ஆவிக்குரிய மற்றும் சரீர தேவைகள், வியாதிகளிலிருந்து அவர்கள் பரிபூரண விடுதலை பெறப் பாரத்தோடு ஜெபிக்கிறோம். தேசத்திற்காகவும் மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபித்து அற்புதங்களைக் காண்கிறோம்.

    கிராம மருத்துவ முகாமில் மருத்துவர்கள் மக்களைப் பரிசோதிக்கின்றனர்

    இலவச மருத்துவ முகாம்கள்

    250 கிராமங்களுக்கும் மேலாகச் சென்று, அநேக ஏழை எளியவர்களுக்குச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவமும் இலவச மருந்துகளும் கொடுக்கக் கர்த்தர் கிருபை செய்து கொண்டிருக்கிறார்.

    சீயோன் இன்டர்நேஷனல் செமினரி பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளும் ஆசிரியர்களும்

    வேதாகமக் கல்லூரி (Bible College – Online & Offline)

    நேரடி மற்றும் இணையவழி வகுப்புகள். உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு வேதாகம மற்றும் இறையியல் வகுப்புகள்.

    கூட்டத்தில் வேதம் பிரசங்கிக்கப்படுகிறது

    எழுப்புதல் ஊழியங்கள்

    பிரசங்கங்கள், போதனைகள், மாநாட்டுக் கூட்டங்கள், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் முகாம்கள் மூலம் கிறிஸ்தவர்கள் மத்தியில் எழுப்புதல்.

    கிராமத்தில் சிறுவர்களுக்கான கூட்டம்

    கிராமப்புற ஊழியங்கள்

    வெளிப்புறக் கூட்டங்கள்; சுவிசேஷக் கைப்பிரதி விநியோகமும் வீடு வீடாகச் சுவிசேஷமும்; பொம்மலாட்டம்.

    ஆண்டுதோறும் சுவிசேஷம் எட்டாத 30 கிராமங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி (VBS).

    சுவிசேஷ அறிவிப்போடு கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் புத்தாடை அளித்து இயேசுவின் அன்பை வெளிப்படுத்துகிறோம்.

    ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு

    ஊழியர்களுக்கான பயிற்சி முகாம்கள்

    இன்றைய ஊழியத்திற்கு ஏற்ப போதகர்களையும் ஊழியர்களையும் ஆயத்தப்படுத்தும் பயிற்சி முகாம்கள்.

    ஒலிப்பதிவுக் கூடத்தில் இறையியல் விரிவுரையைப் பதிவு செய்யும் போதகர்

    இணைய வழி ஊழியங்கள்

    உலகெங்கிலும் உள்ள அநேக மக்களைச் சென்றடைவதற்காக இறையியல் வகுப்புகள், வேத பாடங்கள், ஆலோசனை ஊழியப் பயிற்சிகள் போன்ற அநேக காரியங்களைக் கீழ்க்கண்ட மீடியாக்கள் வழியாக அநேகமாயிரம் மக்களைச் சந்திக்கிறோம்:

    இந்தப் பருவத்திலேயே தொடங்குங்கள்

    சேர்க்கை நடைபெறுகிறது. இன்றே ஒரு இலவசப் பாடத்துடன் தொடங்குங்கள்.